Skip to main content

Live Fencing


செலவில்லாமல் உயிர்சூழலை உருவாக்கும் உயிர்வேலிகள் :

( இந்த மாத தொழில் நுட்பம் பகுதியில் நாம் பார்க்கவிருக்கும் பகுதி )

நன்றி : வானகம் இரண்டாம் மாத இதழ் ஜூலை - ஆகஸ்ட்
http://vanagamvattam.blogspot.in/

கட்டுரைகள் :
https://www.facebook.com/iampraveenmailme )
இரா. வெற்றிமாறன், வானகம்

இயற்கை நேசித்து இயற்கை விவாசாயத்தையும் மண்ணையும், கலாச்சாரத்தையும் காக்கும் விவசாயிகளே!

வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி. ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை திட்டங்களை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையான முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம்.

ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது. இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது. அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது. இதையே தன்னைத் தேடி வரும் அனைத்து விவசாயிகளுக்கும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் அறிவுறுத்துவார்.

உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும் அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது. உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும். உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது.

உயிர்வேலி அமைக்கும் முறையானது நிலத்தின் எல்லையிலிருந்து நிலத்தின் உட்பக்கமாக எட்டடி வரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையிலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டு மூன்று அடி அகலத்திற்க்கு அகழி (வாய்க்கால்) அமைப்பது அவசியமாகும். அகழிக்காகத் தோண்டப்படும் மண் எல்லைப் பக்கமாக கொட்டப்பட்டு, அதில் உயிர்வேலி கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் கொட்டப்பட்ட மண்ணில் எளிதாக வேர்கள் ஓடி வளரச் செய்யும்.

இதில் அமைக்கப்பட்ட அகழியானது அருகில் இருக்கும் நிலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன நஞ்சுகளை காற்றின் மூலமாகவோ மழைநீர் மூலமாகவோ நிலத்திற்குள் வருவதைத் தடுக்கிறது. அத்தோடு மழைநீரை அறுவடை செய்து நிலத்தடிநீரை உயர்த்தவும் பண்ணைக் குட்டை அமைக்கும் போது மழைநீரை கொண்டு செல்லும் வாய்க்காலாகவும் அமைத்துக் கொள்வது என பல்வேறு பயன்களைத் தரவல்லதாக அமைகிறது.

பெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. வேலியில் பயன்படுத்தப்படும் முள்மரங்களாக முள்கிழுவை, பரம்பை மரம், இலந்தை மரம், யானைக்கற்றாழை, ஒத்தக்கள்ளி, காக்காமுள், காரை, சூரை, சங்கமுள், கொடுக்காப்புளி, வெள்வேல், குடைவேல், வாதமடக்கி, பனைமரம் போன்ற உயிர்வேலிகள் உழவர்களுக்கு மட்டுமன்றி பறவை மற்றும் பிற உயிரினங்கள் வாழ வழி செய்கிறது. இதனால் வேளாண் நிலத்தின் ஓர் பன்மயச் சூழலை உருவாக்க முடிகிறது. ஆகியவற்றுடன் சவுண்டல், மலைவேம்பு, சவுக்கு, பீநாறி, நுனா ஆகிய நீள்குடை மரங்கள் காற்றின் வேகத்தைத் தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதுடன் சாகுபடி செய்த பயிர்களை காக்கவும் செய்கிறது. இத்துடன் உயிர்வேலிகளில் பிறண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி, கோவக்கொடி, குறிஞ்சா கொடி, முடக்கத்தான், நொச்சி, சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் இயற்கையாகவே வளர்ந்து பலன் தரும். அதோடு சுரை, பீர்க்கு, பாகற்காய் என விவசாயிகள் தம் தேவைகளுக்கும் பயிரிட்டு பயனடைய முடியும்.

மண் அரிப்பை தடுக்கும் பனைமரம், வெள்வேல், குடைவேல், கொடுக்காப்புளி, போன்ற மரவேலிகளால் உயிர்மண் என்றழைக்கப்படும் நிலத்தின் மேல்மண் பெரும் மழையால் காற்றால் அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது எனவே நிலம் தன் வளத்தை இழக்காது. சவுண்டல், அகத்தி, முள்முருங்கை, கிளாரிசெடியா (உரக்கொன்றை), மலைக்கிழுவை, ஆமணக்கு ஆடாதொடை, நெய்வேலி காட்டாமணக்கு போன்றவை வேலிகளில் அமைப்பதன் மூலம் கால்நடைத் தீவனமாகவும் நிலத்திற்கான உரச்செடிகளாகவும் எண்ணற்ற வகைகளில் பயனளிக்கிறது.

சமீப காலங்களில் உழவர்கள் தமக்கான உயிர்வேலிகளைத் தவிர்த்து சீமைக்கருவேல் மரத்தை வேலியாக அமைத்தனர். அவை நிலத்தடி நீரை உறிஞ்சியும் காற்றின் ஈரப்பத்தை உறிஞ்சியும் மழை பெய்யா சூழலை உருவாக்கி பெரும் வறட்சியை உண்டாக்கிவிட்டது. எனவே நம் மண்ணுக்கேற்ற சூழலுக்கேற்ற உயிர்வேலிகள் அமைப்பது அவசியமாகிறது.

சரியாக மழைக்காலங்களில் உயிர்வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்துப் பின்னர் வறட்சி தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது.
பஞ்ச பூதங்களையும் முழுவதுமாக அறுவடை செய்வதால் மட்டுமே இயற்கை வழி விவசாயத்தில் நாம் முழுபலனடைய முடியும் என்பதையும் நம்மாழ்வார் ஐயா பல கூட்டங்களில் வலியுறுத்தி உள்ளார். அதோடு நின்று விடாமல் நம்முடைய வானகத்தில் இதை செய்தும் காட்டியுள்ளார்.

இந்த உயிர் வேலியின் மூலமாக பறவைகள், பாலூட்டிகள் முதல் பல்லுயிர்களும் தன்னுடைய குடியிருப்புகளை நம்முடைய நிலத்தில் அமைத்து ஒரு உயிர் சூழலை உடனடியாக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நமது நிலத்தில் உணவு சங்கிலி கட்டமைக்கப் படுகிறது. உதாரணமாக இந்த உயிர் வேலிகள் பறவைகளுக்கு இருப்பிடமாக இருப்பதால் நமது வயலில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. மேலும் அதனுடைய எச்சம் நம்முடைய நிலத்திலே விழுவதால் நிலத்திற்கு உயிர் உரமாக மாறுவதோடு, நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.மேலும் மனிதர்களுடைய துணையில்லாமல் வாழும் பல்வேறுபட்ட விதைகள் , மூலிகைகள் மற்றும் வன மரங்களான சந்தனம் போன்றவை இயற்கையாகவே வளர பறவைகளின் எச்சம் உதவுகிறது.

அது போல பம்பு, கீரி, ஆந்தை போன்றவை பல உயிரிகள் எலிகளின் பெருக்கத்தை கட்டுப் படுத்தி விவசாயிகளுக்கு உதவுகிறது. மேலும் மண்ணிக்குள் புதர்களை ஏற்படுத்தி நிலத்திற்கு காற்றோட்டம் கிடைக்க பெரும் பங்கு வகிக்கிறது. இது போல பல்லாயிரக்கணக்கான உயிர்சூழலை குறைந்த காலங்களிலே உருவாக்கி விவசாயிகளின் வேலைப் பளுவை குறைக்கிறது.

மழை நீரையும் இந்த அகழிகள் நிலத்தை விட்டு வெளியேற விடாமல் தடுப்பதால் நம்முடைய நிலத்தின் உவர் தன்மை முற்றிலும் மாற்றப்பட்டு நிலத்தடி நீர் குடி நீராக மாறுகிறது. மேலும் ஆண்டுக்காண்டு பருவ மழையின் அளவு குறைந்து கொண்டே வரும் இது போன்ற சூழ்நிலைகளில் நம்முன்னோர்களின் பாரம்பரிய தொழில் நுட்பங்களை பின்பற்றுவோமேயானால் எதிர்வரும் வறட்சியை எளிமையாக சமாளிக்க முடியும்....

இதற்கு சான்று தான் நம்முடைய வானகம். எங்கு பார்த்தாலும் உவர் நிலமாக இருக்கும் வானகத்தில் இன்று குடிநீரே அமிர்தமாக மாறியது இது போன்ற தொழில் நுட்பத்தால் தான். மேலும் மனிதர்களுடைய துணையில்லாமல் இன்று பல வகையான உயிர்வேலி மரங்கள் வளர்ந்துள்ளதை பார்த்து உணர எப்போது வேண்டுமானாலும் வானகம் வரலாம். 

Comments

Popular posts from this blog

Meen Amilam (Fertilizer from Fish waste)

Steps to prepare Meen Amilam 1. Take equal quantity of Fish Waste and Naatu Sakkarai (Jaggery). 2. Mix the above two materials in a Pot or a Plastic container and close it air tight. 3. Leave it for 21 days 4. On the 22nd day Meen Amilam is ready for use.(it looks like Honey) Usage Mix 30ml of this portion prepared above with 10litres of water and spray it on the plants. This acts both as fertilizer and pest repellent. http://youtu.be/JoSL9uRQ9AI

Solar Cooker using Fresnel Lens

Old rear projection TV’s use what is called a fresnel lens for their screens, and these lenses can be used to make one hell of a powerful  solar cooker. Not only can these lens cook food but they can also start fire, boil water and even melt metal. What is best of all is you can find one of these lenses free, just look on Craigslist and you will find most people just give them away just to get them out of their house. So all you have to do is go pick it up and spend a few bucks on some wood for a frame and your good to go. Below are a few good videos to show you how to find one and make a frame and to see what they can do in action. I know I’ll be picking up a free rear projection TV as soon as I find one. further read...

Preparing Organic Compost

Things needed: 1. Cow Dung 2. Cow Urine 3. Green Leaves 4. Some Straw Allot a 4 x 10 area under the shade. And make sandwich of layers of cow dung, soil, green leaves and a little straw mixed with cow urine.Keep adding layers of each of these and sprinkle little bit of water in the evening. After 15 days dig 3 or 4 holes and add earthworm to it.  Allow 2 months for this sandwich to decompose and the compost will be ready. http://facebook.com/EyarkaiOduNaam